Monday, December 27, 2010

வடுக்களை வகையாய் சுமந்தபடி நின்கிறது வன்னி மண்

அடுப்புக்குள் நெருப்பணைந்த நாட்கள் தெரியாது எங்கள் வீடுகளில், வந்த விருந்தினர் உண்ணாமல் போனதில்லை எங்கள் மண்ணில். வந்தவரை எல்லாம் வாழவைத்து பெருமை பெற்ற மண் எங்கள் வன்னி மண்..!

துயர்கள் சூழ துடித்திருக்கிறது எங்கள் சந்ததியேன்று. காலச்சூற்சிக்குள் சுற்ற மறுத்த எம் மண், காலனின் கடைக்கண் பார்வைக்குள் அகப்பட்டது சோகம். நின்று நிதானிக்கும் நேரங்கள் எதுகுமின்றி நொடிப்பொழுதில் நாங்கள் அகதியாக்கப்பட்டடோம், அனாதரவானோம், அனாதைகளானோம்..!

கூட இருந்த சொந்தங்கள், கூடபடித்த தோழர்கள், எல்லோரும் அழிந்து போக நடைபிணமாய் நாங்கள் வாழ்கின்றோம்.

பச்சைப்பசேல் என்று பரந்து விரிந்திருந்த வன்னி மண் இன்று மீண்டும் வாழத்துடிக்கிறது.

செப்பினப்பட்டுள்ளன பாதைகள், ஆனாலும் செப்பனிப்படாத மனதுடன் ஆட்சியாளர்..!

நாட்கள் நகர்ந்து இரண்டு வருடங்களை தொடுகின்றபோதும், நாம் நம்பியிருந்த உதவிகளும், நம்மால் முடியும் என்ற இறுமாப்பும் இல்லாமலே போனது.

தோட்டம் செய்தோம், வயல்கள் விதைத்தோம், எதுகும் செய்ய முடியாத சோகம். இறைப்பதற்க்கு நீர் இறைக்கும் இயந்திரம் இல்லை, உழுவதற்க்கான கூலி கொடுத்த இருந்த பணம் அழிந்துவிடும். இல்லாத உழைப்பில் எங்கே இருக்கிறது வருமாணம், நான்கு தகரம், நாலு தடி வீடு போட்டுக்கொள்ள வேண்டியது தானே என்பதே எல்லோர் பேச்சும். முடியுமா என்று சிந்திப்பவர்கள் குறைவு....!

பாம்புகளோடும், அறனைகளோடும் படுத்துறங்கும் பயங்கரம் கருத்து சொல்பவர்களுக்கு இருக்காது என்பது எங்களுக்கு தெரியும். கொட்டும் மழைக்கும் கொழுத்தும் வெயிலுக்கும் நாங்கள் பழக்கப்பட்டவர்கள் தான். ஆனாலும் வீட்டுக்குள் பெய்யும் மழை எங்களுக்கு பழையதே!

உறவுகளே இது உங்களுக்காய் எழுதப்பட்டதல்ல. எங்கள் உள்ளத்து குமுறல் அதை சொன்னோhம்.!

நன்றி..

No comments:

Post a Comment